king of RajaRaja cholan
*இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில்* கட்டுமானம் முதல் பதிவில் பெரிய கோவிலின் கட்டுமானம் எப்படி பட்டது என காண்போம் 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப்பேரரசனான கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே பலமுறை காவிரியின் வெள்ளத்திற்கு போக்கு காட்டி நிற்கையில் 1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாய் நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை முழுக்க முழுக்க இராஜ ராஜ சோழனின் கற்பனையாலும், அவரின் குருவும், சித்தர்களில் ஒருவரான கருவூராரின் அறிவுரையாலும் உருவானதே பெருவுடையார் கோவில் அஸ்திவாரம் இத்தனை காலம் கோவில் கம்பீரமாக நிற்பதற்கு முதன்மை காரணம் அஸ்திவாரம் சரி கோவிலின் அஸ்திவாரம் எப்படிப்பட்டது...? 2010-ம் ஆண்டு கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவிற்காக கோவில் வளாகத்திலேயே ஆழ்கிணறு தோண்டினர். கோவில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறை பகுதியாகும். ஆனால் ஆச்சரியமாக அங்கு தோண்ட தோண்ட கிடைத்தது பருமணல் தான், 350 அடிகளுக்கு மேல் தான் களிமண் வந்தது ( பரு + மணல் இது மலைப்பகுதியில் கி...